×

கொரோனா பலியை குறைத்து பட்டியல் சிலியில் சுகாதார அமைச்சர் ராஜினாமா

சாண்டியாகோ: கொரோனா பலியை குறைத்துக் காட்டிய விவகாரத்தால் சிலி நாட்டின் சுகாதார அமைச்சர் ஜெய்மி மணலிச் தனது பதவியை ராஜினாமா செய்தார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் கொரோனாவால் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும், அரசு தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் குறைத்து காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிஐபிஇஆர் என்ற புலனாய்வு பத்திரிகை ெவளியிட்ட ஆதாரபூர்வமான செய்தியில் 5,000க்கும் மேற்பட்டோர் பலியான தகவல்கள் வெளியாகின.

உலக சுகாதார அமைப்பும், பத்திரிகை செய்தியை உறுதிப்படுத்தியது. அதையடுத்து, அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஜெய்மி மணலிச்சுக்கு அரசியல் ரீதியான நெருக்கடி ஏற்பட்டது.பின்னர் நீண்ட இழுபறிக்கு பின்னர் அமைச்சர் ஜெய்மி மணலிச் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை அந்நாட்டு ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா ஏற்றுக் கொண்டார். கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை மறைத்து காட்டிய விவகாரத்தில் அமைச்சர் ராஜினாமா செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Chilean ,Health Minister ,Resigns , Chilean Health, Minister, Resigns
× RELATED ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சைவ ஆமை...