×

ஐகோர்ட் உத்தரவை மீறி விழுப்புரம் - நாகை 4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம்: ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் மக்கள் வேதனை

தரங்கம்பாடி: உயர்நீதிமன்ற தடை உத்தரவை மீறி 4 வழிச்சாலைக்காக ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுவது தரங்கம்பாடி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. விழுப்புரம் -நாகப்பட்டினம் இடையேயான 4 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருவதோடு சாலையோரம் உள்ள ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி இடையே 27 கிலோ மீட்டர் தூரம் சாலையோரம் உள்ள 6,320 மரங்களை வெட்டும் பணி தொடங்கியுள்ளது. இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மரங்களை வெட்ட இடைக்கால தடை உத்தரவு பெற்றனர்.

இந்நிலையில் நீதிமன்றம் உத்தரவை மீறி சாலையோரம் உள்ள மரங்களை வெட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுற்றுச்சுழல் அறிக்கை தாக்கல் செய்யாமலும், பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலும் ஊரடங்கு காலத்திற்குள் சாலையோர மரங்களை வெட்டிவிட வேண்டும் என்ற நோக்கில் அரசு செயல்படுவதாக தரங்கம்பாடி மக்கள் வேதனை தெரிவித்தனர். கையகப்படுத்திய நிலங்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவில்லை என குற்றம் சாடிய மக்கள், தென்னை மரங்களை வெட்டுவது வேதனை அளிப்பதாக கூறினர். மரங்களை வெட்டுவதை உடனடியாக நிறுத்துமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்த மக்கள், மரக்கன்றுகள் நடும் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.


Tags : Government ,Villuppuram - Nagai 4 ,Villupuram-Nagai 4 , ICourt, Villupuram - Nagai 4 road, government, people suffering
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்