×

அம்பலமானது குஜராத் மாடல்... நாட்டிலேயே குஜராத்தில் தான் அதிகமான கொரோனா உயிரிழப்புக்கள்.. ராகுல் காந்தி சாடல்!!

டெல்லி: குஜராத் மாடல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது, நாட்டில் அதிக கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை பதிவு செய்துள்ளது குஜராத்தான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, குஜராத் மாடல் என்ற பிரச்சாரம் முன் வைக்கப்பட்டது. மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ச்சியடைந்துள்ளதால், இந்தியாவுக்கு அதுபோன்ற வளர்ச்சி கிடைக்க.. மோடியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது பாஜக பிரச்சாரமாக இருந்தது. இந்த நிலையில், ராகுல் காந்தி குஜராத் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

நாட்டில் கொரோனாவால் உயிரிழக்கும் சராசரி விகிதத்தைவிட இரு மடங்கு குஜராத்தில் இருப்பதாவும் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். நாட்டில் கொரோனா வைரஸால் மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. அங்கு கொரோனா உயிரிழப்பு என்பது 3.73 சதவீதம்தான் ஆனால், கொரோனா பாதிப்பில் 4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் கொரோனா உயிரிழப்பு 6.25 சதவீதமாக இருக்கிறது என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “மாநில
வாரயாக கொரோனா உயிரிழப்பு விகிதம்: குஜராத் 6.25 சதவீதம், மகராஷ்டிார 3.73 சதவீதம், ராஜஸ்தான் 2.32 சதவீதம், பஞ்சாப் 2.17 சதவீம், புதுச்சேரி 1.98 சதவீதம், ஜார்கண்ட் 0.5 சதவீதம், சத்தீஸ்கர் 0.35 சதவீதம்
குஜராத் மாடல் அம்பலமாகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.முன்னதாக, நேற்று, ஐன்ஸ்டீனை அவர் மேற்கோள் காட்டியுள்ளார்: அறியாமையை விட ஆபத்தான ஒரே விஷயம் ஆணவம் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Tags : Gujarat ,country ,Rahul Gandhi Sadal , Exposure, Gujarat, Model, Corona, Deaths, Rahul Gandhi, Sadal
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...