×

ரயில்வே தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்வு : தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பிற்கான மற்றுமோர் ஆதாரம் என ஸ்டாலின் கருத்து

சென்னை : தெற்கு ரயில்வேயில் சரக்கு வண்டி பாதுகாவலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில், சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். இதில் 3000 பேர் வரை தமிழர்கள் ஆவர். இந்தநிலையில், ஆன்லைன் தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மீதமுள்ள 91 இடங்களுக்கும் வட மாநிலத்தவர்கள் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வு முடிவுகள் ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,தெற்கு ரயில்வேயில் சரக்கு ரயில்களின் பாதுகாவலருக்கானத் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.இது தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட புறக்கணிப்பிற்கான மற்றுமோர் ஆதாரம்.
இந்த ஆட்சேர்ப்பு முறைமையை மறு ஆய்வுக்கு உட்படுத்துவதோடு சமூநீதியையும் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன், என கூறியுள்ளார். ரயில்வே தேர்வுகளில் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamils ,Stalin , Railways, Select, Tamils, Source, Stalin, Opinion
× RELATED மகளிர் நோய்களும் சித்த மருத்துவமும்!