×

வியர்வை மூலம் மது அருந்தும் அளவை, உடனுக்குடன் தெரிவிக்கும் மின்னணு சாதனம்: நெதர்லாந்து நாட்டில் அறிமுகம்!

நெதர்லாந்து: வியர்வை மூலம் மது அருந்தும் அளவை, உடனுக்குடன் தெரிவிக்கும் மின்னணு சாதனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடிபோதையில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் தாங்கள் அருந்தும் மது அளவை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள மணிக்கட்டில் அறியப்படும் மின்னணு சாதனம் நெதர்லாந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் வாய், தொண்டை மற்றும் மார்பு ஆகிய பகுதிகளில் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே உள்ளது. அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு பல்வேறு தீங்குகளும் ஏற்படுகின்றன. இருப்பினரும் பலர் இன்றளவும் மதுபிரியர்களாகவே உள்ளனர்.

இந்நிலையில் உடலிலிருந்து வெளிப்படும் வியர்வை மூலமாகவே மது அருந்தும் அளவை தெரிவிக்கும் சாதனம் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் மூன்றில் ஒரு பங்கு குற்றங்கள் குடிபோதையால் ஏற்படுவதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக மது பிரியர்கள் இந்த மின்னணு சாதனத்தை மணிக்கட்டில் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை இயற்ற நெதர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது. வழக்கமாக ரத்தம் அல்லது சிறுநீர் மாதிரிகள் மூலம் மது அருந்திய அளவு கணக்கிடப்பட்டு வந்த நிலையில் வியர்வையில் இருந்து மது அளவை இந்த மின்னணு சாதனம் கணக்கிடும் என தெரிவிக்கப்படுகிறது. இதனை, தொடர்ந்து அணிவதால் மது அருந்தும் எண்ணம் தங்களுக்கு ஏற்படுவதில்லை என  மது பிரியர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.


Tags : Introduction ,Netherlands , Sweat, alcohol level, electronic device, Netherlands
× RELATED கேட்கும் அளவு உரங்களை வழங்க வேண்டும்