×

கர்நாடகாவில் சுகாதார பணியாளர்கள் மீது மீண்டும் தாக்குதல்: தொற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் அத்துமீறல்

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதார துறையினர் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற போராடி வரும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திலையில் மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகாவுக்கு திரும்பிய 14 பேர் தனிமைப்படுத்துதல் மையங்களில் வைக்கப்பட்டு கமலாப்பூர் தாலுகாவில் உள்ள அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

2-ம் கட்ட சோதனை நடத்திய போது அவர்கள் அனைவர்க்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்கள் அனைவரையும் கொரோனா வார்டில் சேர்ப்பதற்காக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் உடன் அந்த கிராமத்திற்கு சென்றனர். அப்போது காவல்துறை வாகனங்கள் மீது கிராம மக்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. பின்னர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கூடுதல் போலீசார் அனுப்பப்பட்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

கொரோனாவுக்கு எதிராக போராடும் சுகாதாரத்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக அரசு எச்சரித்துள்ள நிலையில் மீண்டும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : attacks ,health workers ,Karnataka ,outbreak , Karnataka, health workers, attack
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...