×

1975ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறை... இந்தியா மீது சீனா தாக்குதல் : சீனப்படை வெளியேறும் போது, வன்முறை ஏற்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கம்

டெல்லி: இந்திய சீன எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவம் நடத்திய கல்வீச்சு தாக்குதலில், 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 1967ம் ஆண்டு தொடங்கி 1967 வரை இந்தியா - சீனா இடையே சிக்கிம் பகுதியில் ஒரு போர் நடைபெற்றது. இந்த போரில் 80 இந்திய வீரர்களும், 400  சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து,சுமார் 8 வருடங்கள் கழித்து, 1975ம் ஆண்டு, மீண்டும் ஒரு முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் ரைபிள்ஸ் ஜவான்கள் சீனாவின் துலுங் லா என்ற பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகினர். அருணாச்சல பிரதேசத்தின் எல்லை பகுதியில் உள்ள இந்த இடத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இந்த நிலையில்தான் 2005-ம் ஆண்டு இந்தியா மற்றும் சீனா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இரு நாட்டு ராணுவத்தில் எந்த ராணுவம் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்றாலும், மறுபுறம் உள்ள ராணுவம் பேனரை உயர்த்திப் பிடித்து, நீங்கள் உங்கள் எல்லைக்கு திரும்பிப் போங்கள் என்று சொல்வது வழக்கம். இதுதான் இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இரு நாட்டு ராணுவ வீரர்களும் இதுபோல பேனர்களை பிடித்து எதிரி நாட்டு ராணுவ வீரர்களை திரும்பிப் போகச் செய்து உள்ளனர்.

ஆனால் இத்தனை வருடங்களுக்குப் பிறகு இன்று லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் முதல்முறையாக சீன தரப்பு இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. சீன ராணுவத்தினர் கல் மற்றும் கட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியதில், இந்திய ராணுவத்தின் மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். இந்திய தரப்பும் பதிலடி தாக்குதல் நடத்தியதில் 5 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீனப்படை வெளியேறும் போது, வன்முறை ஏற்பட்டது என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.


Tags : time ,India ,China , 1975, Year, India, China, Assault, Chinese Army, Violence, Indian Army, Description
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...