×

கொரோனா தொற்றை கண்டறிய 483 இடங்களில் மருத்துவ முகாம்

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது, என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த தினசரி மருத்துவ முகாம்களை நடத்தும் திட்டத்தை சென்னை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. சென்னையில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வார்டு வாரியாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்று முன்தினம் 203 இடங்களில் நடத்தப்பட்ட மருத்துவ முகாம்களில் 10 ஆயிரத்து 541 பேர் பங்கேற்றனர். இதில் 392 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று 483 இடங்களில் காய்ச்சல் முகாம்் நடத்தப்பட்டது. இதில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து சென்னையில் தினசரி வீடு வீடாக பரிசோதனைக்கு செல்லும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி களப்பணியாளர்கள் அனைவரும் தங்களை சோதனை செய்து, உடல் வெப்பநிலை தொடர்பான விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : camp ,locations , Corona, Medical Camp, Chennai, Kanchipuram, Thiruvallur, Chengalpattu
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு