×

மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு

டெல்லி : நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த இருவாரங்களாக தீவிரமாக அதிகரித்துவரும் சூழலில் மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்துகிறார். சுமார் 3 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க உள்ளார். லடாக் எல்லை தொடர்பாக இந்திய - சீனா இடையே மோதல் இருந்து வரும் நிலையில் இந்திய ராணுவ தரப்பில் ஒரு அதிகாரி மற்றும் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ஆகையால் இந்தியா - சீனா இடையே நடைபெற்ற மோதல் தொடர்பாக ராஜ்நாத் சிங் பிரதமருடன் ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Rajnath Singh ,Modi ,Chief Ministers ,state ,Advisory Meeting ,State Chiefs , State Chief Minister, Prime Minister Modi, Consultative Meeting, Union Defense Department, Minister, Rajnath Singh
× RELATED இந்தியா மண்ணை ரஃபேல் விமானங்கள்...