×

டெல்டாவில் குறுவை சாகுபடி தீவிரம் முளைப்பு திறன் இல்லாத விதைநெல்லால் பாதிப்பு: விவசாயிகள் கவலை

குறுவை சாகுபடிக்கு அரசு விநியோகித்த விதைநெல்லில் போதிய முளைப்புதிறன் இல்லாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். டெல்டா மாவட்டத்தின் பாசனத்திற்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகின்றது.

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை குறைவின் காரணமாகவும், கர்நாடகாவிடமிருந்து உரிய தண்ணீரை தமிழக அரசு கேட்டு பெறாததாலும் டெல்டா விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடியையே மிகவும் போராட்டத்துடன் செய்து வந்தனர். இதன் காரணமாக டெல்டா மாவட்ட விளை நிலங்கள் ஆண்டுதோறும் பல மாதங்கள் தரிசு பூமியாக காட்சியளித்தன. இதனால் விவசாயிகளுக்கு உரிய வருவாய் கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாக டெல்டா விவசாயிகள் போதிய வருவாய் இல்லாமலும், கடும் மழை மற்றும் கடும் வறட்சி, புயல் போன்ற காரணத்தால் பெரிதும் பாதித்துள்ளனர். தொடர் வருவாய் இழப்பில் இருந்து வரும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறந்த போதும் குறுவைசாகுபடி மேற்கொள்வது பெரிய சவாலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டம் மற்றும் சம்பா தொகுப்பு திட்டம் ஆகியவற்றை அளித்து வந்தது.

கடும் வறட்சி காலத்திலேயே வறட்சிக்கு நிவாரணம் வழங்கியது தமிழக அரசு. ஆனால் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொகுப்பு திட்டங்களை இதுவரை அறிவிக்காதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் வங்கிகடன் வழங்குவதிலும் சிக்கல் ஆகியவை விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது. முன்னதாக விதை நெல்லுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் விதை நெல்லை முழுதொகை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எட்டு ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்யாத நிலையில் குறுவை சாகுபடி மேற்கொள்வதற்கான கையிருப்பு இல்லாத நிலையில் விதை நெல்லை அரசிடமும், தனியாரிடமும் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியை சேர்ந்த முன்னோடி விவசாயி சுமார் இருபது ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கான விதை நெல்லை வாங்க வலங்கைமான் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டபோது விதை நெல் இருப்பு இல்லாததை அடுத்து குடந்தையை அடுத்த திருப்பனந்தாள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நூற்று பத்து நாள் வயதுடைய கோ 51 என்ற ரக விதை நெல்லினை கிலோ ரூ.40.80க்கு இருபத்தைந்து சிப்பம் கடந்த மே மாதம் வாங்கி உள்ளார். பின்னர் ஜூன் மாதம் முதல் வாரத்தில் விதை விட்ட நிலையில் விதை சரிவர முளைக்கவில்லை. சராசரியாக எண்பது சதவீதத்திற்கு மேல் முளைப்புதிறன் உள்ள விதைகளை விற்பனை செய்து வரும் நிலையில் தற்போது பத்து சதவீத முளைப்புதிறன் கொண்ட விதையை அரசே விற்பனை செய்வது விவசாயிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக விதை நெல், உரம், பூச்சிமருந்து ஆகியவைகளுக்கு மானியம் வழங்காத நிலையில் முழு விலையை கொடுத்து வாங்கிய விதை நெல்லும் போதிய முளைப்பு திறன் அற்ற நிலையில் உள்ளது. டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இதே நிலை தான் உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரண்டு மாதங்கள் முன்னதாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அரசு விநியோகித்த விதை நெல்லில் போதிய முளைப்புதிறன் இல்லாததால் கவலையடைந்துள்ளனர்.

கடும் வறட்சி காலத்திலேயே வறட்சிக்கு நிவாரணம் வழங்கியது தமிழக அரசு. ஆனால் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தொகுப்பு திட்டங்களை இதுவரை அறிவிக்காதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மேலும் வங்கிகடன் வழங்குவதிலும் சிக்கல் ஆகியவை விவசாயிகளை கவலை அடைய செய்துள்ளது.

முன்னோடி விவசாயி சுமார் இருபது ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ள திட்டமிட்டு அதற்கான விதை நெல்லை வாங்க வலங்கைமான் வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொண்டபோது விதை நெல் இருப்பு இல்லாததை அடுத்து குடந்தையை அடுத்த திருப்பனந்தாள் வேளாண்மை விரிவாக்க மையத்தில் நூற்று பத்து நாள் வயதுடைய கோ 51 என்ற ரக விதை நெல்லினை கிலோ ரூ.40.80க்கு இருபத்தைந்து சிப்பம் கடந்த மே மாதம் வாங்கி உள்ளார்.

Tags : delta , Seedling vulnerability,germination,delta, intensification ,cross-cropping intensity,farmers' concerns
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை