×

மாந்தோப்பில் இருந்த காவலாளியை குத்திய காட்டுமாடு: படுகாயத்துடன் சிகிச்சை

பெரியகுளம்: பெரியகுளம் அருகே காட்டுமாடு தாக்கி தோட்ட காவலாளி படுகாயம் அடைந்தார். பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியை சேர்ந்தவர் வாசகம்(60). இவர் மஞ்சளாறு அணைப்பகுதிக்கு மேல் உள்ள மாந்தோப்பில் காவல் பணியாற்றி வருகிறார். நேற்று காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது காட்டுமாடு ஒன்று வந்தது. அதனை விரட்டியுள்ளார். அப்போது அந்த காட்டுமாடு தாக்கி முட்டியதில் கால் மற்றும் உடம்பில் காயம் ஏற்பட்டது. அருகே உள்ள மாந்தோப்புகளில் பணியில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு மாதத்தில் மாந்தோப்புகளில் பணியில் இருந்த கூலித்தொழிலாளர்கள் 4 பேரை காட்டுமாடுகள் தாக்கியுள்ளன. இதில் ஒரு நபர் இறந்து விட்டார். மற்ற 3 நபர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பெரியகுளம் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்குத் தேவையான குடிநீர் வசதி இல்லை. இதனால் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய கூலித்தொழிலாளர்களை தாக்கி வருகின்றன. எனவே வனத்துறையினர் வனப்பகுதிக்குள் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் நிலைகளை ஏற்படுத்தி வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : guards ,Mantorp , Wild man ,stabbed, guards , Mantorp, treatment , injury
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ