×

கொடைக்கானல் ஏரியில் ஆகாய தாமரைகள் அகற்றம்: நகராட்சி பணியாளர்கள் செய்தனர்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரியில் களைச்செடிகள் மற்றும் நீர் தாவரங்களை அகற்றும் பணியினை நகராட்சி பணியாளர்கள் மூன்றாவது நாளாக தொடர்கின்றனர். மலைகளின் இளவரசி கொடைக்கானல் நட்சத்திர ஏரி சுற்றுலா இடங்களில் முக்கியமானதாகும். சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களில் மிக அழகானதும் ரம்மியமானதுமான இந்த ஏரி சமீபகாலமாக மாசடைந்து வருகிறது. கொடைக்கானல் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியினை தூய்மைப்படுத்துவதற்காக அவ்வப்போது கொடைக்கானல் நகராட்சி துப்புரவு பணியாளர்களின் உதவியுடன் ஒரு சில பகுதிகளை மட்டும் களைசெடிகளை அகற்றி வருகின்றனர். 144 தடை உத்தரவு காரணமாக கடந்த பல மாதங்களாக இந்த பணியை நகராட்சி செய்யவில்லை.

 இதனால் ஆகாயத்தாமரை உள்ளிட்ட களைச்செடிகள் அதிகளவில் பெருகி ஏரியை அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று கொடைக்கானல் நகராட்சி ஏரியை தூய்மைப்படுத்தும் பணியை செய்து வருகின்றனர். பல இடங்களில் இந்த பணியினால் ஏரியின் கரைகள் தூய்மை அடைந்து வருகிறது. இதேபோல நேற்று கொடைக்கானல் நகராட்சியில் துப்புரவு பணியாளர்கள் சுமார் 15 பேரை வைத்து கொடைக்கானல் நகராட்சி அலுவலகம் அருகில் நகராட்சி படகு குழாம் அருகாமையில் மற்றும் எதிர்ப்புறம் உள்ள ஏரியின் கரைப் பகுதியிலும் ஏரிக்குள்ளும் திடீரென்று முளைத்துள்ள களைச்செடிகள் மற்றும் நீர்த்தாவரங்கள் அகற்றும் பணியினை நகராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Tags : Kodaikanal Lake , Disposal ,air tanks , Kodaikanal Lake, Municipal employees did
× RELATED கொடைக்கானலில் நவீன இயந்திரம் மூலம் ஏரியில் தூய்மை பணி