×

ராஜபாளையத்தில் சிதைந்து கிடக்கும் பாலத்தால் ஆபத்து

ராஜபாளையம்:  ராஜபாளையம் புதிய பஸ்நிலையம் முன்பு விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள சாலையோர பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ராஜபாளையம் - சங்கரன்கோவில் சந்திப்பில் இருந்து புதிய பஸ்நிலையம் வரை சாலை சேதமடைந்து கிடந்தது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பினர். இதனை ஏற்று இரண்டுமுறை இந்த சாலை புதுப்பிக்கப்பட்டது. ஆனால், அப்போது புதிய பஸ்நிலையம் எதிரில் சேதமடைந்து கிடந்த சிறிய பாலம்  புதுப்பிக்கப்படவில்லை.

இதனால் பஸ் நுழைவாயிலில் பெரும் பள்ளமாக இருப்பதால் விபத்து  ஏற்படும் சூழ்நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ``தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான பெரிய அளவிலான குழாய்கள் இச்சாலையில் பாதிக்கப்பட்டது. அப்போது சேதமடைந்த சாலை, மக்களின் கோரிக்கையை ஏற்று சீர் செய்யப்பட்ட்து. தற்போது புதிய சாலை அமைக்கும் பணி  நடைபெற்றது. ஆனால் சாலையில் குறுக்கே சிறிய அளவிலான பாலங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் வாகனங்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. எனவே, உடனடியாக இப்பாலத்தை சீரமைக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : bridge ,Rajapalayam Rajapalayam , Risk , collapsed ,bridge , Rajapalayam
× RELATED கண்டமனூர் அருகே கண்டமாகி கிடக்கும் ஓடை பாலம்