×

உத்திரப் பிரதேசத்தில் 'பேய்'உடற்பயிற்சி செய்வதாக வீடியோ வைரல் : விஷமிகளின் திருவிளையாடலை கண்டுபிடித்த போலீஸ்

லக்னோ : விசித்திரமான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வலம் வருவது வாடிக்கைதான். ஆனால் சமீபத்தில் உடற்பயிற்சி கருவி ஒன்று, தானாகவே இயங்கும் வீடியோ நாடு முழுவதிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறுதியில் இதன் பின்னணியில், ஆர்வத்தை தூண்டும் ஒரு நிகழ்வு இருப்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. உத்திரப்  பிரதேசம் மாநிலம், ஜான்சி நகரில் உள்ள ஒரு பூங்கா இயக்குவோர் யாரும் இல்லாமல், அமானுஷியாமாக ஆடிக் கொண்டிருக்கிறது உடற்பயிற்சி கருவி ஒன்று.

தோள்பட்டைகளை உறுதியாக்கும் பயிற்சிக்காக அங்கு வைக்கப்பட்டு இருந்த கருவி, பேயாட்டம் போடும் இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் அசுர வேகத்தில் பரவியது. அருவமாக இருக்கும் பேய் ஒன்று, உடற்பயிற்சி செய்வதாக பலர் கதைக்கட்டி விட்டதால் பரபரப்பு மேலும் அதிகமானது. இதையடுத்து தாமாக முன்வந்து விசாரணை செய்த ஜான்சி காவல்துறையினர்.

இது விஷமிகள், சிலரின் திருவிளையாடல் என்பதை கண்டறிந்தனர். கருவி எளிதாக இயங்குவதற்கு பயன்படும் லூபிரிக்கண்ட எனப்படும் எண்ணெயை அதிகளவுக்கு ஊற்றி இருப்பதும் அதன் காரணமாக கருவியின் இயக்கம் தூண்டப்பட்டு, தானாக இயக்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. எப்படியோ அரண்டவர் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற பழமொழி, மீண்டும் உண்மையாகி இருக்கிறது.


Tags : Uttar Pradesh ,police harassment , Uttar Pradesh, 'Haunted', Exercise, Video, Viral, Poisons, Thriller, Police
× RELATED வாக்குவாதம் செய்ததை தடுத்ததால் விமான...