×

தஜிகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்,..6.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு

துஷான்பே: மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் இன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். பயங்கர நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. துஷான்பே நக இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 341 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில்  6.8 ஆக பதிவு செய்யப்பட்டிருந்ததாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின.

பல்வேறு கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, திறந்தவெளியில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக காஷ்மீரில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.


Tags : earthquake ,Tajikistan ,Greater Earthquake , Earthquake , Tajikistan
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்