×

சிறை நட்பால் சீரழிந்த குடும்பம் கள்ளத்தொடர்பால் விபரீதம் வாலிபர் வெட்டிக்கொலை : 4 பேர் கைது

பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நாலூர் ஒரு கேசவபுரம் பகுதியை சேர்ந்தவர் பசுபதி (26). இவர் அதே பகுதியை சேர்ந்த சபரிதா (25) என்ற பெண்ணை கடந்த 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். பசுபதி திருட்டு, வழிப்பறியில் அடிக்கடி ஈடுபட்டு அடிக்கடி சிறைக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, திருவொற்றியூரை சேர்ந்த கணேஷ்குமார் (30) என்பவரும் வழிப்பறி, திருட்டு வழக்கில் சிறையில் இருந்துள்ளார். இருவரும் சிறையில் நண்பர்களாகினர். இந்நிலையில், பசுபதி, மனைவி சபரிதாவிடம் கணேஷ்குமாரை அறிமுகப்படுத்தியுள்ளார். பசுபதி, சிறையில் இருந்தபோது கணேஷ்மாரும் சபரிதாவும் அடிக்கடி நேரில் சந்தித்துள்ளனர். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. சிறையில் இருந்து வெளியே வந்த  பசுபதி, வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். கணேஷ்குமாரும் சபரிதாவும் அதே பகுதியில் வேறு ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தது தெரியவந்தது. மனைவியை வீட்டுக்கு அழைத்தும் அவர் வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பசுபதி, தனது கூட்டாளிகளை அழைத்துக்கொண்டு நேற்று காலை கணேஷ்குமார் வீட்டுக்கு சென்றார். அப்போது பசுபதியின் மனைவியும் கணேஷ்குமாரும் ஒன்றாக இருந்துள்ளனர். இதனால் மேலும், ஆத்திரமடைந்த பசுபதி, கணேஷ்குமாரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் துடித்த கணேஷ்குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார். பசுபதி தனது கூட்டாளிகளுடன் தப்பினார். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேஷ்குமார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மீஞ்சூர் ஏரிக்கரையில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த பசுபதி மற்றும் அவரது கூட்டாளிகளான எழில் (25), முத்து (24), மணிகண்டன் (27) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags : Prison, counterfeit, youth slaughter, 4 arrested
× RELATED சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு...