×

போலி சானிடைசர் விற்பனை மாநிலங்களுக்கு சிபிஐ எச்சரிக்கை

புதுடெல்லி: அதிக மெத்தனாலை பயன்படுத்தி நச்சுதன்மையுள்ள போலி சானிடைசர் தயாரித்தல் மற்றும் போலி பிபிஇ விற்பனை குறித்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சிபிஐ எச்சரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், சானிடைசர் மற்றும் பிபிஇ மற்றும் இதர கொரோனா தொடர்பான மருத்துவப் பொருட்கள் விநியோகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் சில மோசடி கும்பல்கள் போலி சானிடைசர்களை தயாரித்து சந்தையில் விற்பனை செய்வதாக சிபிஐக்கு ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன.

அதிக மெத்தனாலை பயன்படுத்தி தயாரிக்கப்படுவதால் இவை நச்சுதன்மை உடையவை என்பதால் உடல் நலத்துக்கு ஊறுவிளைவிப்பவை. இதனை தொடர்ந்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் இதர சட்ட அமலாக்கதுறையை சிபிஐ எச்சரித்துள்ளது. சில மோசடி கும்பல்கள் மருத்துவமனை,சுகாதார மையங்களை அணுகி விற்பனை செய்யலாம் என்பதால் மிகுந்த கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : CBI ,states ,alerts states ,sanitizer , Fake Sanitizer Sales, States, CBI
× RELATED குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில்...