×

கொரோனா நோயாளிகளுக்கான தனிமை ரயில் பெட்டிகள் மீது வெப்பத்தை தடுக்கும் உறை: ரயில்வே வாரிய தலைவர் பேட்டி

புதுடெல்லி: கொரோனா சிறப்பு ரயில் பெட்டிகளில் வெப்பத்தை தடுக்கும் வகையில் மேற்கூரையில் பிளாஸ்டிக் தாள்கள் ஒட்டப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்று அதிகரித்தால் நோயாளிகளை அனுமதிக்கும் வகையில் ரயில் பெட்டிகள் கொரோனா தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. 4 மாநிலங்களில் 204 கொரோனா தனிமைப்படுத்துதல் ரயில் பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை கொரோனா நோயாளிகள் பராமரிப்பு மையங்களாக செயல்பட்டு வருகின்றது. இவை அனைத்தும் ஏசி வசதியில்லா சாதாரண ரயில் பெட்டிகளாகும்.
இந்நிலையில் அதிக வெப்பம் காரணமாக கொரோனா நோயாளிகள் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்பதால், வெயிலால் அனல் கீழே இறங்காமல் இருக்க ரயில் பெட்டிகளின் கூரை மீது வெப்பத்தை தடுக்கும் பிளாஸ்டிக் தாள்கள் ஒட்டப்படும் என ரயில்வே வாரிய தலைவர் விகே யாதவ் தெரிவித்துள்ளார்.



Tags : Railway Board Chairman ,Corona , Corona Patients, Loneliness, Train Boxes, Railway Board Chairman
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...