×

மாயன் காலண்டர் கணிப்பின் படி, ஜூன் 21ம் தேதியுடன் உலகம் அழியப் போகிறதா? : நாசா விஞ்ஞானிகள் விளக்கம்!!!

வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா அச்சத்தில் உறைந்து போய் கிடைக்கும் நிலையில், வரும் 21ம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்று மாயன் காலண்டர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் கிரெகோரியன் காலண்டர் முறை 1752 முதல் நடைமுறையில் உள்ளது.கிரெகோரியன் காலண்டர் சூரியனை சுற்ற பூமி எடுத்துக் கொள்ளும் நேரத்தை பொறுத்து உருவாக்கப்பட்டது.

அதற்கு முன்னதாக மாயன், ஜூலியன் காலண்டர்கள் அதிக பயன்பாட்டில் இருந்தன. ஜூலியன் காலண்டர் படி, கிரெகோரியன் காலண்டரில் ஆண்டுக்கு 11 நாட்கள் குறைவாக கணக்கிடப்படுகிறது. அதன்படி, இந்த உலகம் தற்போது இருப்பது 2020ம் ஆண்டு அல்ல 2012ம் ஆண்டு என்பது கிரெகோரியன் காலண்டரின் நிலை. மாயன் காலண்டரில் உலகம் அழிவதாக கூறிய தேதி தற்போதைய காலண்டர்படி வரும் ஜூன் 21ம் தேதி வருகிறது. எனவே வரும் 21ம் தேதி உலகம் அழியப்போகிறது என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

நாசா விஞ்ஞானிகள் விளக்கம்!!

இது குறித்து விளக்கியுள்ள அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், சுமேரியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட நிபிரு கிரகம் பூமியை நோக்கி வருவதாகவும், இதனால் 2003ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று கூறினர்.அதன்பின்னர் 2012ம் ஆண்டில் மாயன் காலண்டரின் படி உலகம் அழிந்துவிடும் என்று கூறினர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. ஏனெனில் இவை அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது 2020ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று மீண்டும் தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆகையால் மக்கள் பீதியடைய தேவையில்லை, என்வும் தெரிவித்துள்ளனர்.


Tags : world ,scientists ,NASA , NASA, scientists, description, Mayan calendar, June 21st, world
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்