×

அறியாமையை விட ஆணவம் ஆபத்தானது: ஐன்ஸ்டீனை மேற்கோள் காட்டி ராகுல் கிண்டல்

புதுடெல்லி: நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் மூலம், அறியாமையை விட ஆணவம் ஆபத்தானது’ என்ற கூற்று நிருபிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால், அரசு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும் அரசு ஊரடங்கை அமல்படுத்தியதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றை சரியாக கையாளவில்லை; அரசு அதில் தோல்வி அடைந்து விட்டது எனவும் அவர் கூறியுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நலிவுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும். இதற்கு புத்துயிர் ஊட்ட, ஏழை மக்களின் கைகளில் பணம் கிடைப்பதற்கான நிதி ஊக்குவிப்பை அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

இந்நிலையில், ராகுல் நேற்று அவர் தனது டிவிட்டர் பதிவில், இந்த ஊரடங்கின் மூலம், அறியாமையை விட மிக மோசமான ஒன்று உண்டென்றால் அது ஆணவம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது’’ என்று பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கூற்றை சுட்டிக் காட்டி பதிவிட்டுள்ளார்.
மேலும், ``அரசு தனது ஆணவப் போக்கினால் எதிர்க்கட்சிகளின் கருத்தை கேட்பதில்லை, அவர்களது குரலுக்கு செவி சாய்ப்பதில்லை. நான்கு முறையிலான ஊரடங்கின் மூலம் கொரோனா பலி எண்ணிக்கையை சமநிலைக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால், தவறுதலாக நாட்டின் பொருளாதாரம் சமநிலையை அடைந்துள்ளது. பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது,’’ என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.



Tags : Einstein , Ignorance, arrogance, Einstein, Rahul
× RELATED ஆண்டனி படத்தின் டிஜிட்டல் உரிமையை...