×

அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் அனைவருக்கும் சோதனை: காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி:  டெல்லியில் கொரோனா நோய் தொற்று பரவல் குறித்து ஆலோசிக்கும் வகையில் அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலின் தற்போதைய நிலை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, “20ம் தேதி முதல் டெல்லி அரசானது ஒரு நாளைக்கு 18 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்” என்றார்.Tags : Amit Shah ,meeting raids ,Delhi ,Congress , Amit Shah, All Party Meeting, Congress
× RELATED மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று...