×

அரசு அங்கீகாரம் கிடைக்காததால் அறிவியல் கண்டுபிடிப்பு ஆவணங்கள் தீயிட்டு எரித்த இளம் விஞ்ஞானி

தரங்கம்பாடி: நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் கடந்த 10 ஆண்டுகளாக தனியார் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை இளம் விஞ்ஞானி முரளி நடத்தி வருகிறார். இங்கு மக்களுக்கு பயன்படக்கூடிய அறிவியல் சார்ந்த 300 புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியுள்ளார்.  தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரி மாணவர்கள் புதிய கண்டு பிடிப்புகளை உருவாக்க உறுதுணையாகவும், ஊன்றுகோலாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் முரளியின் கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் அங்கீகாரம் வேண்டியும் பொதுமக்களுக்கு பயன்பெறக்கூடிய முக்கிய கண்டுபிடிப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டியும் அரசிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை அங்கீகாரம் கிடைக்கவில்லை. மேலும் இவர் வங்கியில் கடன் கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை.

 ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் கோயில் நிலம் என்பதால் நிறுவனத்தை மாற்ற வற்புறுத்தப்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த முரளி, 10 ஆண்டு கால உழைப்பான ஆராய்ச்சி நிறுவனத்தை மூடியதோடு, தனது கண்டுபிடிப்பு மாதிரிகள், ஆவணங்கள், பாராட்டு சான்றிதழ்களை நேற்று தீயிட்டு அழித்தார். சில கண்டுபிடிப்புகளை மட்டும் மாணவர்கள் பயனுக்காக அரசு பள்ளிகளுக்கு வழங்கியுள்ளார்.

Tags : scientist , young scientist, burned scientific discovery documents , government disapproval
× RELATED ஈரானின் முக்கியத்துவம் வாய்ந்த அணு...