×

50,000 சிறுவர், சிறுமியருக்கு கால்பந்து பயிற்சி திட்டம்

மும்பை: சென்னையின் எப்சி கால்பந்து கிளப் சார்பில் 50,000 சிறுவர், சிறுமியருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அந்த அணியின் இணை உரிமையாளர் வீடா தானி கூறினார். கோ ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை சார்பில் ‘இந்திய விளயாட்டு உலகில் வீராங்கனைகள், தொழில்முனைவோர் சந்திக்கும் சவால்கள்’ குறித்த விவாதத்திற்கு இணையதளம் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பேசிய  வீடா தானி, ‘சென்னையின் எப்சி அணியின் அடித்தள மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக 50 ஆயிரம் சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்படும். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் சிறுமிகள்.

நாங்கள்  இளம் திறமைகளுக்கு வாய்ப்பளிக்க விரும்புகிறோம். அதிலும் சிறுமிகளுக்கு வாய்ப்பளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். காரணம் இந்திய பெண்கள்தான் நம் நாட்டின் விளையாட்டு உலகை வழி நடத்துகின்றனர். ஏனென்றால் இன்றைய பெண்கள் எதிலும், அவர்கள் செய்யும் எல்லாவற்றிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்’ என்றார்.


Tags : girls ,boys , 50,000 boys, girls, football training program
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்