×

திருவனந்தபுரத்தில் எளிமையாக நடந்தது கேரள முதல்வர் மகள் திருமணம்: டிஒய்எப்ஐ தேசிய தலைவரை மணந்தார்

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராய் விஜயன் மகள் திருமணம் நேற்று திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் நடந்தது. கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு வீணா விஜயன் என்ற ஒரு மகள் உள்ளார். இவர் பெங்களூருவில் சாப்ட்வேர் நிறுவன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், டிஒய்எப்ஐ அகில இந்திய தலைவர் முகமது ரியாசுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா லாக்-டவுனால் அப்போது திருமணம் நடத்த முடியவில்லை. இதையடுத்து இவர்களுக்கு நேற்று(15ம் தேதி) திருவனந்தபுரத்தில் உள்ள முதல்வர் பினராய் விஜயனின் அரசு இல்லத்தில் மிக எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இரு வீட்டாரின் ெநருங்கிய உறவினர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

தம்பதிகள் இருவரும் திருமணமாகி விவாகரத்து ஆனவர்கள். வீணா விஜயனுக்கு ஒரு மகன் உள்ளார். முகமது ரியாசுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முகமது ரியாசின் தந்தை அப்துல் காதர் கோழிக்கோடு முன்னாள் போலீஸ் கமிஷனர் ஆவார். எஸ்எப்ஐ மூலம் அரசியலுக்குள் நுழைந்த முகமது ரியாஸ், தலா ஒருமுறை சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு டிஒய்எப்ஐ அகில இந்திய தலைவராக ேதர்ந்தெடுக்கப்பட்டார்.

Tags : Thiruvananthapuram ,Chief Minister ,Kerala CM DYFI ,Kerala , Kerala Chief Minister, Daughter Marries ,DYFI National Leader
× RELATED கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு?