×

செங்கல்பட்டு-திருச்சி ரயில் நேரம் மாற்றம்

சென்னை: செங்கல்பட்டு -திருச்சி, கோவை-அரக்கோணம் இடையே கடந்த 12ம் தேதி 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் தொடங்கியது. இந்த நிலையில் திருச்சி-செங்கல்பட்டு இடையிலான ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மதியம் 2 மணிக்கு இயக்கப்பட்டு வந்த செங்கல்பட்டு-திருச்சி இடையே (06795)  அதிவிரைவு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று முதல் பிற்பகல் 3   மணிக்கு செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

இந்த ரயில் மேல்மருவத்தூர்,  விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பக்கோணம், தஞ்சாவூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று திருச்சிக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடையும். இந்த சிறப்பு ரயில் மறுமார்க்கமாக திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து (06796) காலை 6 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நின்று செங்கல்பட்டிற்கு பிற்பகல் 12.45 மணிக்கு வந்தடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


Tags : Chengalpattu-Trichy , Chengalpattu-Trichy ,train time, shift
× RELATED செங்கல்பட்டு, திருச்சி, ஈரோடு...