×

ஊரடங்கு நீட்டிப்பு ரத்து கோரிய வழக்கில் புதன்கிழமை உத்தரவு: உயர் நீதிமன்ற அமர்வு தகவல்

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் இமானுவேல் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனா ஊரடங்கு மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதை, படிப்படியாக நீட்டித்து,  31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனாக்கு தடுப்புமருந்து கண்டுபிடிக்கும் வரை அது நம்முடன்தான் இருக்கும்.முகக்கவசம் அணிய வேண்டும் போன்ற நிபந்தனைகளை அரசு விதித்துள்ளது. இதை கடைபிடித்தாலே வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம். எனவே, ஊரடங்கை நீட்டித்து கடந்த 17ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சக்திவேல், ‘’விதிகளை பின்பற்றாமல் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார். அதற்கு அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன்,‘இதுபோன்ற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘’இதுகுறித்து வரும் புதன்கிழமை உத்தரவு பிரப்பிக்கப்படும்’ என்றார்.


Tags : cancellation , Wednesday order , cancellation, curfew extension, High Court Session Information
× RELATED ஓடுபாதையில் சென்று கொண்டிருந்தபோது...