×

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயமானதாக செய்தி வந்த நிலையில் விபத்தில் ஒருவர் காயம், மற்றொருவர் கைது என பாக். ஊடகம் தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் ஓட்டிச்சென்ற வாகனம் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் காயமடைந்ததாகவும், மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் டெல்லி பாகிஸ்தான் தூதரக விசா பிரிவு ஊழியர்களான ஆபித் உசைன், முகமது தாஹிர் கான், ஜாகித் உசைன் ஆகிய மூன்று பேரும் இந்தியர்கள் என்ற போலி அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு இந்திய ராணுவத்தின் படை நீக்கங்கள் குறித்த உளவு வேலை பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு மறுநாள் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் நடைபெற்றதில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மறைமுகமாக பாகிஸ்தான் உளவு பிரிவினர் மிரட்டல் விடுத்து வருவதாக செய்திகள் வெளியாகின. இதனை தொடர்ந்து, தூதரக உயர் அதிகாரியான கவுரவ் அலுவாலியாவை பின்தொடர்ந்து சென்று பாகிஸ்தான் உளவு துறையினர் துன்புறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தூதரக ஊழியர்கள் பலரின் குடும்பத்தினருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இன்று காலை அலுவல் தொடர்பாக வெளியே சென்ற இந்திய தூதரக ஊழியர்கள் 2 பேர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாமல் மாயமாகி விட்டனர். இந்தியாவின் உளவாளிகளாக இவர்களை சித்தரிக்க திட்டமிட்டு, பாகிஸ்தான் அதிகாரிகள் கடத்தி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. ஊழியர்கள் மாயமான விவகாரம் குறித்து மத்திய அரசு, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் ஓட்டிச்சென்ற வாகனம் ஏற்படுத்திய விபத்தில் ஒருவர் காயமடைந்ததாகவும், மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்துள்ளது.


Tags : persons ,embassy officials ,Pakistani , Pakistan, Indian Embassy, Accident, Injury, Arrest, Pak. Media
× RELATED ஆடு திருடமுயன்ற இரண்டு பேர் கைது