×

குஜராத்தில் மாநிலத்தில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரின் அருகே இன்று மதியம் 12.57 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜ்கோட்டில் இருந்து வடமேற்கில் சுமார் 82 கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 -ஆக பதிவாகியுள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. பல இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஒரு சில இடங்களில் சுவர்கள் இடிந்து விழுந்தன.

இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் நிலநடுக்கத்தால் இதுவரை ஏற்பட்ட பாதிப்போ அல்லது உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த 24 மணி நேரத்திற்குள் ராஜ்கோட்டைத் தாக்கிய இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று இரவு 8:13 மணிக்கு பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக குஜராத்தின் கட்ச் பகுதியில் 2001ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.7-ஆக பதிவாகியுள்ளது. இது ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கியதுடன், ஏராளமான கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.


Tags : Quake ,state ,Gujarat ,earthquake ,Rajkot ,National Center for Seismology , Earthquake in Gujarat
× RELATED நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட...