×

உயிரிழப்பு அதிகரிக்கும் என்பதும் எதிர்பார்த்தது தான்; சீனாவை போன்று தமிழகத்திலும் 2-வது அலை ஆரம்பிக்கலாம்...மருத்துவ நிபுணர் குழு பேட்டி

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மருத்துவ நிபுணர் குழுவினர் சுமார் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மருத்துவ நிபுணர் குழுவினர், நோய்களை தடுப்பதற்கான வழிகள் குறித்தும் முதலமைச்சரிடம் ஆலோசித்தோம். சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமுடக்கத்தை கடுமையாக்க முதலமைச்சரிடம், மருத்துவக் குழு பரிந்துரை செய்துள்ளோம். கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டு குறையும் என்று கூறியதாகவும் அதுபோல் நடக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

சென்னையில் ஒவ்வொரு வார்டுகளிலும் தடுப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், தமிழகம் முழுவதும் 75 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாராக இருக்கிறது என்றனர். மருத்துவக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு முழுமையாக செயல்படுத்தி வருவதாகவும், அரசு மட்டும் நடவடிக்கை எடுத்தால் கொரோனா குறையாது என்றும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூட ஆக்சிஜன் சிலிண்டர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தலைவலி, காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியப்படுத்த வேண்டாம். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறையத் தொடங்கும் என்றனர்.

3 மாதத்திற்கு பிறகு 2 வது கட்ட கொரோனா பரவல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், சீனாவில் 2-வது அலை ஆரம்பித்தது போல் தமிழகத்திலும் 3 மாதத்துக்கு பின் ஆரம்பிக்கலாம். ஓரிரு நாள் காய்ச்சல் இருந்தாலும் அலட்சியபடுத்தாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் என்பதும் எதிர்பார்க்கப்பட்டது தான். மாஸ்க், தனிமனித இடைவெளி போன்றவை மூலம்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்தனர்.


Tags : wave ,Tamil Nadu ,China ,panel ,team ,TN CM ,Lockdown ,experts , Lockdown ,restrictions , Tamilnadu,
× RELATED மோடி அலை இல்லை: பாஜக வேட்பாளர் பேச்சால் பரபரப்பு