×

கொரோனா வைரஸுக்கு எதிராக முதல் வெற்றி கண்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் பிரகடனம் :நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு!!

பாரீஸ் : கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திவிட்டதாக அறிவித்துள்ள பிரான்ஸ் அரசு, வணிக நிறுவனங்களையும் திறக்க உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சி மூலம் மக்களிடம் உறையற்றிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், பார்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியவற்றுக்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார். வரும் 22ம் தேதி முதல் பிரான்ஸ் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் திறக்கப்படும் என்றும் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரான்ஸ் அதிபர்  இமானுவேல் மேக்ரோன் கூறியதாவது:-கொரோனா பெருந்தொற்றை வெற்றி கொண்டதை அடுத்து திங்கள் முதல் அனைத்து வணிகம் சார்ந்த அனைத்தும் செயல்பாட்டிற்கு வரும் பார்கள், உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள்  ஆகியவற்றிற்கான அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருகிறது. எதிர்வரும் 22ம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சிறுவர் பள்ளிகள் என அனைத்தும் கட்டாயமாக செயற்பாட்டிற்கு வர உள்ளது. பிரஞ்ச் கயானா, மயோட தீவில் மட்டும் கட்டுப்பாடுகளில் தளர்வு இல்லை. திங்கட்கிழமை முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பயணிக்க முடியும். ஜூலை 1 ம் தேதி முதல் ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளுக்கும் பயணப்பட முடியும் என கூறினார்.

பிரான்சில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து, அந்நாட்டு அரசு ஊரடங்கை தளர்த்தியுள்ளது. இருப்பினும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் பிரான்ஸ் அரசு கட்டாயமாக்கி இருக்கிறது. பிரான்சில் இதுவரை 1 லட்சத்து 57 ஆயிரத்து 300 பேரை பிடித்திருக்கும் கொரோனா, 29,407 உயிர்களை பறித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : President ,French ,victory , Corona, Virus, First Victory, President of France, Declaration, Curfew, Restrictions, Relaxation
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...