×

கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் உயிரிழப்பு!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட 28 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். கோவை ஆர்ஜி புதூர் பகுதியை சேர்ந்த 28 வயதான இளைஞர் சென்னை குளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கடந்த வாரம், சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு மூன்று நாள் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நிலை மிக மோசமானதையடுத்து, நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறியான சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்துள்ளது. இதனால் இவரை தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதையடுத்து, அவருக்கு முதல் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் முதல் பரிசோதனையில் குறிப்பிட்டுள்ளது போல எந்தவித தொற்றும் இல்லை என தெரியவந்துள்ளது.

இருப்பினும் அந்த இளைஞருக்கு மிக கடுமையாக சுவாச பிரச்சனை ஏற்பட்டுள்ளதை அடுத்து இவர் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததால் பிரேத பரிசோதனைக்காக அவர் உடல் மீண்டும் கோவை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பரிசோதனை என்பது 24 மணி நேரத்திற்கு பிறகு தான் எடுக்கப்பட வேண்டும் என்றும், அதன்பின்னரே இவருக்கு தொற்று உள்ளதா? என்பது குறித்தும் தெரியவரும் என மருத்துவமனையின் டீன் காளிதாஸ் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இவர் சென்னையிலிருந்து கோவைக்கு எப்போது வந்தார். இவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்..யார்? என்பது குறித்தும் தற்போது சுகாதாரத்துறை அதற்கான விசாரணையை முடிக்கிவிடப்பட்டுள்ளது.


Tags : Corona ,hospital , Coimbatore Government Hospital, Corona, Symptom, 28 Years Youth, Death
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...