×

கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கை அடுத்த ஆண்டு நடத்த திட்டம்!: திட்டமிட்டபடியே அரங்குகளில் போட்டியை நடத்த தீவிரம்!

டோக்கியோ: கொரோனா பாதிப்பால் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி தேர்வு செய்யப்பட்ட அதே இடத்தில் பாதுகாப்புடன் நடத்த முடியும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறவிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பால் ஒலிம்பிக் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியை திட்டமிட்டபடி தேர்வு செய்யப்பட்ட அதே இடத்தில் பாதுகாப்புடன் நடத்த முடியும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டோக்கியோ தலைமை நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தேர்வு செய்யப்பட்ட அதே இடத்தில் நடத்த முடியும் என்று நம்புகிறேன்.

அதற்கான நடவடிக்கையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். பாதுகாப்புடன் நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என தெரிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காகவே உருவாக்கப்பட்ட தடகள கிராமத்தில் உலகத்தரம் வாய்ந்த அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் அந்த இடத்தை மாற்றம் இல்லாமல் பயன்படுத்த போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக போட்டிக்கான அட்டவணையை டோக்கியோ பெருநகர அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து தயாரிக்கும் முயற்சியில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஈடுபட்டுள்ளது.


Tags : half ,Tokyo Olympics ,Corona , Corona, Tokyo Olympics, planned stage, intensity
× RELATED Twins எங்களின் அடையாளம்!