×

வியாபாரிகள் தன்னிச்சையாக முடிவு எடுக்க கூடாது: கலெக்டர் எச்சரிக்கை

பொன்னேரி: கடைகளை மூடுவது குறித்து வியாபாாரிகள்  தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க கூடாது என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பொன்னேரி பேரூராட்சியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில், 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 79 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள், பேரூராட்சி அதிகாரிகள், காவல்துறை, வருவாய்த்துறை என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பொன்னேரி பேரூராட்சியில் இன்று முதல் 21ம் தேதி வரை அனைத்து கடைகளையும் அடைக்க  முடிவு செய்யப்பட்டது.

இதற்கு, பால் கடைகள், மருந்தகங்கள் தவிர்த்து அனைத்து கடைகளையும் அடைக்க வியாபாரிகள் ஒப்புதல் தெரிவித்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூடும் இடங்களில் பேரூராட்சி சார்பில் ஆட்டோவில் அறிவிப்பு செய்யப்பட்டது. மேலும், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் வாங்கி வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட நிர்வாகம் உத்தரவிடாமல் வியாபாரிகள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது. பொதுமக்கள் அடிப்படைத் தேவையான அனைத்து பொருட்களும் வழங்கவேண்டும். அரசாங்கம் உத்தரவு வரும் வரை அனைத்து கடைகளும் திறக்க வேண்டும்.

 சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை உதவிட வேண்டும்.    
பொன்னேரியில் இன்று முதல் வழக்கம்போல் அனைத்து கடைகளும் திறக்கவேண்டும் என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
அதன்பேரில் வியாபாரிகள் அனைத்து கடைகளையும் திறக்க முடிவு செய்துள்ளனர்.   


Tags : Merchants ,Collector , Merchants, collector
× RELATED பறக்கும் படை கெடுபிடியால் மக்கள்...