×

அளவு குறைவாக வழங்கிய பெட்ரோல் பங்க்கை பொதுமக்கள் முற்றுகை

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் அளவு குறைவாக பெட்ரோல் வழங்கிய பங்க்கை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். உத்திரமேரூர் செங்கல்பட்டு சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர் ஒருவர் நேற்று இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட்டுள்ளார். இருசக்கர வாகனமானது சிறிது தூரம் சென்று நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்ததால் சந்தேகம் அடைந்த வாடிக்கையாளர் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு சென்று தான் வைத்திருந்த வாட்டர் கேன் ஒன்றில் பெட்ரோல் வாங்கியுள்ளார்.  அதில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கால் லிட்டர் வரை குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த வாடிக்கையாளர் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பெட்ரோல் நிரப்ப வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் பெட்ரோல் பங்க்கை முற்றுகையிட்டு பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
 பின்னர் பங்கின் மோட்டார் பழுது காரணமாக இந்த தவறு நேர்ந்ததாக கூறி உடனடியாக சீரமைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
 அதன் பேரில் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : blockade , Petrol Bunk, public, Siege
× RELATED உத்திரமேரூர் அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்