×

பிளஸ் 1 சேர்க்கை கூடாது புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி முக்கியம்: தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெறாமல் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்களை சேர்க்க கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, வரும் கல்வி ஆண்டில் 6 பாடங்களுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதிலாக 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும் என்று அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அதற்கு ஏற்ப மாணவர்கள் தாங்கள் விரும்பும் 5 பாடங்களை விருப்பம் போல தேர்வு செய்துகொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை மூலம் உத்தரவிடப்பட்டது. அதன்படி மாணவர்கள் ஆங்கிலம், தமிழ், கணிதம், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடங்களையும் கணக்கு தவிர்த்து ஆங்கிலம், தமிழ், உயிர் அறிவியல், வேதியியல் இயற்பியல் ஆகிய பாடங்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

தற்ேபாது கொரோனா நோய்ப் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதனால் அரசு அறிவித்துள்ள புதிய பாடத் தொகுப்புக்கு தனியார் பள்ளிகள் அனுமதி வாங்க வேண்டும். இதை மீறி  மே மற்றும் ஜூன் மாதங்களில் மாணவர் சேர்க்கையை நடத்திவிட்டு செப்டம்பர்  மற்றும் அக்டோபர் மாதம் புதிய பாடத் தொகுப்புக்கு அனுமதி கேட்கக்கூடாது. இது அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மூலம் அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரியப்படுத்தியுள்ளதால், மாவட்டங்களில் புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெற்ற பிறகே மாணவர்களை சேர்்க்க வேண்டும். இதையடுத்து, வரும் கல்வி ஆண்டில் அரசு அறிமுகம் செய்துள்ள புதிய பாடத்தொகுப்புக்கு அனுமதி பெற்ற பிறகே பிளஸ் 1 வகுப்பில் மாணவர் சேர்க்கையை தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Tags : schools ,Education Department , Plus 1 admission, new curriculum, private schools, education
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...