×

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, இமாச்சலப் பிரதேசம் ,பஞ்சாப் : கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் 5 மாநிலங்கள்!!

டெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்று விகிதத்தை குறைப்பில் 5 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசம் ஆகியவை முன்னுதாரணமாக திகழ்கின்றன. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கேரளா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களும், சண்டிகர் யூனியன் பிரதேசமும் கடந்த மூன்று 14- நாட்கள் காலப்பகுதியில், கோவிட் -19 கேஸ்களின் பாசிட்டிவ் விகிதத்தை (உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் எண்ணிக்கை/100 பரிசோதனைகள் ) 3%த்திற்கும் கீழ் குறைத்து சாதனை புரிந்துள்ளது.மேற்கூறப்பட்ட 5 மாநிலங்களும் பசுமை மண்டலத்தில் கோவிட் -19 கேஸ்களின் பாசிட்டிவ் விகிதத்தை 3% க்கும் குறைவாக வைத்திருக்கும் நிலையில், சண்டிகர் மட்டும் பாசிட்டிவ் விகிதத்தை 5%த்திற்கும் கீழ் வைத்துள்ளது.

 இரண்டு வார காலப்பகுதியில்கோவிட் -19 கேஸ்களின் பாசிட்டிவ் விகிதத்தை 5%க்கும் குறைவாக பராமரிக்கும் மாநிலங்கள்,  ஊரடங்கு நடவடிக்கைகளை தளர்த்த தயாராக இருப்பதாக கருதப்படுகிறது. கடந்த 14 நாட்களில், மத்தியப் பிரதேசத்தின் பாசிட்டிவ் விகிதம் 5% முதல் 3% வரை குறைந்துள்ளது. ராஜஸ்தானின் பாசிட்டிவ் விகிதம் 2% ஆக நிலையாக உள்ளது. கடந்த 3 14- நாட்கள் காலப்பகுதியில், கேரளாவின் கோவிட் -19 கேஸ்களின் பாசிட்டிவ் விகிதம் 2% (மே 19 - ஜூன் 1) இருந்து 1.69% ஆக (மே 31-ஜூன் 13 காலகட்டத்தில்)  2% ஆக குறைந்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் கேஸ்களின் பாசிட்டிவ் விகிதம் கடந்த இரண்டு 14- நாட்கள் காலப்பகுதியில், 1% ஆகவும், பஞ்சாபில் 1% க்கும் குறைவாகவும் உள்ளது. இது கொரோனா தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் இரு மாநிலங்களுக்கும் ஒரு பெரிய சாதனை. சண்டிகர் மட்டுமே ஆய்வு செய்யப்பட்ட மூன்று காலகட்டங்களிலும் தொடர்ந்து 5% சுற்றி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, கேஸ்களின் பாசிட்டிவ் விகிதம் மே 7-21 காலத்தில் 5%மும், மே 19-ஜூன் 1 காலத்தில் 6.4%மும் ,மே 31-ஜூன் 13 காலத்தில்  7.4% வரை உயர்ந்துள்ளது,


Tags : Himachal Pradesh ,Madhya Pradesh ,Punjab ,Rajasthan ,Kerala ,Corona , Madhya Pradesh, Rajasthan, Kerala, Himachal Pradesh, Punjab, Corona, 5 States
× RELATED மாநிலங்களவை தேர்தலில் பாஜவுக்கு...