யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரிப்பு: பண்ருட்டியில் 3 வாலிபர்கள் கைது

பண்ருட்டி: யுடியூப் பார்த்து பிளாஸ்டிக் துப்பாக்கி தயாரித்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பாளையம் கிராமத்தில் ஐடிஐ படித்து முடித்த சிவப்பிரகாசம் (24), வெற்றி (20), வினோத் (19) ஆகிய 3 பேரும் யுடியூப்பில் பிளாஸ்டிக் துப்பாக்கிகளை செய்வது எப்படி என பார்த்துவிட்டு, அதுபோல் பிளாஸ்டிக் துப்பாக்கியை தயார் செய்துள்ளனர். இதனை பயன்படுத்தி அணிலை சுடுவது, மாமரத்தில் மாங்காய்களை சுட்டு பறிப்பது போன்ற செயல்களை விளையாட்டாக செய்து வந்தனர். இவர்களின் செயலால் அப்பகுதி மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி அருகில் உள்ள காடாம்புலியூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த 3 இளைஞர்களும் எந்தவொரு பிளாஸ்டிக் துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>