×

மருத்துவத்தில் தொழிலுக்கும் சேவைக்கும் வித்தியாசமுண்டு: டாக்டர் ஜே.எஸ்.ராஜ்குமார், லைப் லைன் மருத்துவமனை தலைவர்

இந்தியா மற்றும் துபாய்க்கு என்று ஒவ்வொரு மாதமும் வந்து செல்பவன் நான். தற்போது கொரோனா ஊரடங்கால், துபாயிலேயே இருக்க வேண்டிய சூழல்நிலை ஏற்பட்டுள்ளது. ஐன்ஸ்டின் என்ன சொல்லியுள்ளார் என்றால், எந்த ஒரு நபரும் ஒரு சிஸ்டம் உள்ளே இருந்தால், அந்த சிஸ்டம் பற்றி நம்மால் கருத்து சொல்ல முடியாது. அதுவே சற்று தள்ளியிருந்து பார்த்தால் வெளிப்படையாக தெரியும் என்று சொன்னார். தற்போது கொரோனாவால் நான் இங்கேயே இருந்து வருவதால், இங்கே இருந்து இந்தியாவில் என்ன நடக்கிறது என்று பார்த்து வருகிறேன். நான் கூறுவது ஒரு மூன்றாவது மனிதன் பார்த்து கூறுவது போல் ஆகும். தனியார் மருத்துவமனைகள் குறித்து கூறும்போது, நாம் செய்யும் தவறுகள் பல உள்ளது. இப்போது எல்லோரும் தனியார் மருத்துவமனைகள் குறித்து ஏதேதோ கூறிவிடுகின்றனர்.உதாரணமாக கூற வேண்டும் என்றால், சினிமா ஹிரோக்கள் சிலர் ₹39 கோடி சம்பளம் வாங்குகின்றனர். ஆனால் எல்லா ஹீரோக்களும் அதே கோடிகளை வாங்குவதில்லை. பலர் ஏதாச்சும் வாய்ப்பு கிடைக்குமா என்று அலைந்து வருகின்றனர். அதேபோல் தான், எல்லா மருத்துவமனைகளும் அதிக கட்டணம் வசூலிப்பதில்லை. பலர் ஏதோ தவறாக கூறுகின்றனர். அதற்காக தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலுப்பதில்லை என்று நான் கூறவேயில்லை. ஒரு சில தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டண வசூலில் ஈடுபடுகின்றனர்.

அதுபோன்ற மருத்துவமனைகளை தொழிலதிபர்கள் பலர் நடத்துகின்றனர். அவர்கள் தொழிலாக பார்ப்பதால் எப்பவுமே சிகிச்சைகளுக்கு அதிக கட்டணங்களை வசூலிப்பதுண்டு. தற்போது கொரோனா வந்துள்ளதால், இதனையும் ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தி தொழில் செய்கின்றனர். ஒரு சிலர் மருத்துவமனை தலைவர்கள் டாக்டராக இருந்தும், அதை பெயருக்காக கூறிகொண்டு தொழிலாக தான் செய்கின்றனர். தொழிலாக பார்ப்பதால் அதிக கட்டணம் தான் வசூல் செய்வார்கள்.
மேலும் 200 தனியார் மருத்துவமனைகள் இருந்தால், அதில் ஒன்று தான் இப்படி இருக்கும். அப்படி இருப்பவர்களை குறை கூறுவதற்காக, எல்லா மருத்துவமனைகளையும் குறை கூறி வருகின்றனர். இஷ்டத்துக்கு எழுதுகின்றனர். தவறு செய்யும் பெரிய மருத்துவமனைகளையும், உதவி செய்யும் சின்ன நடுத்தர மருத்துவமனைகளையும் இணைத்து பேசுவது அம்மா, அப்பாவை குறை கூறுவது போல் ஆகும். இந்தியர்கள் முக்கியமாக தமிழர்கள் குறை சொல்ல தொடங்கிவிட்டோம். இதைவிட முக்கியமானது, நாம் எந்த மருத்துவமனையை திட்டுகிறமோ, யார் ஏமாத்துகிறான் என்று கூறுகிறமோ, அங்கு தான் முதல்வர், பிரதமர் வரை சிகிச்சைக்கு செல்வார்கள். நாமும் அப்படித் தான். இது இப்போது தொடங்கியது இல்லை.

 எப்போது பன்னாட்டு மருத்துவமனைகள் வர தொடங்கியதோ அப்போதிலிருந்து, அய்யோ அப்படி செய்றாங்க, இப்படி செய்யுறாங்க என்று கூறிகொண்டே அங்கே சென்று கொண்டுதான் இருக்கின்றனர். சேவைக்கும் தொழிலுக்கும் வித்தியாசமுண்டு; தொழிலாக செய்யும் மருத்துவமனைகளை புறக்கணிப்போம். இதை நாம் செய்தால் லட்சங்களை வாங்கும் மருத்துவமனைகளும் சேவையாக பார்க்க துவங்கி  விடுவர். யார் ஏமாத்துகிறான் என்று கூறுகிறமோ, அங்கு தான் முதல்வர், பிரதமர் வரை சிகிச்சைக்கு செல்வார்கள். நாமும் அப்படி தான். இது இப்போது தொடங்கியது இல்லை.



Tags : JS Rajkumar , difference between work , service , medicine, Dr. JS Rajkumar, Head of Life Line Hospital
× RELATED மே தினத்தை ஒட்டி முதலமைச்சர்...