×

ஒடிசா மாநிலம் மகாநதியில் புதைந்த 500 ஆண்டு பழமையான கோயில் கண்டுபிடிப்பு

புவனேஷ்வர்: ஒடிசாவில் மகாநதி பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பாரம்பரிய தளங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் திட்டம் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மகாநதி ஆற்றில் மூழ்கியிருந்த பழமைவாய்ந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசாவின் கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்துக்கான இந்திய தேசிய அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் அனில் திர் கூறியதாவது: கட்டாக்கில் உள்ள பத்மாவதி பகுதி அருகே உள்ள பைதேஸ்வர் பகுதியில் இந்த கோயில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கோயிலுக்கான கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களின் அடிப்படையில் இது 15 அல்லது 16ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகின்றது. இதுகுறித்து விரைவில் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்துக்கு கடிதம் எழுதவுள்ளோம். மேலும் கோயிலை வேறு இடத்திற்கு மாற்றுவது மற்றும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இது வரை 65க்கும் மேற்பட்ட பழமைவாய்ந்த கோயில்கள் மகாநதி நதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல கோயில் ஹிராகுட்டில் உள்ளன. நீர் தேக்கத்தை அகற்றி கோயிலை புனரமைக்க முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Odisha State ,Mahanadi ,temple , 500-year-old temple,found , Mahanadi, Odisha State
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலுக்கு லிப்ட்...