×

பார்சிலோனா வெற்றி தொடக்கம்

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர், கொரோனா வைரஸ் தொற்று அபாயம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தொடர் மீண்டும் தொடங்கி உள்ளது. ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் பார்சிலோனா - மல்லோர்கா அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில் பார்சிலோனா அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது.

அந்த அணியின் விடால் (2வது நிமிடம்), பிரெய்த்வெய்ட் (37’), ஜோர்டி ஆல்பா (79’), லியோனல் மெஸ்ஸி (90’+3) ஆகியோர் கோல் போட்டனர். நடப்பு சீசனில் மெஸ்ஸி இதுவரை 20 கோல் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


பார்சிலோனா அணி 28 லீக் ஆட்டத்தில் 19 வெற்றி, 4 டிரா, 5 தோல்வியுடன் 61 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. ரியல் மாட்ரிட் (56), செவில்லா (50), ரியல் சோசிடாட் (46), கெடாபி (36), அத்லெடிகோ மாட்ரிட் (45) அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.

Tags : Barcelona , Barcelona ,win, start
× RELATED யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனா