×

ஐசிசி போட்டிகளுக்கு தயாராவதில் சரியான திட்டமிடுதல் அவசியம்...: சொல்கிறார் இர்பான்

மும்பை: இந்திய அணி ஐசிசி உலக கோப்பை போன்ற பெரிய போட்டிகளுக்கு தயாராகும்போது சரியான திட்டமிடுதல் அவசியம் என்று முன்னாள் ஆல் ரவுண்டர் இர்பான் பதான் கூறியுள்ளார். டோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 2013ம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. ஆனால், அதன் பிறகு விளையாடிய பெரிய தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் தொடர்ந்து தடுமாறி வருகிறது. கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் கோஹ்லி தலைமையில் களமிறங்கிய இந்தியா அரை இறுதியுடன் வெளியேறி ஏமாற்றமளித்தது. இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் ஐசிசி ஆண்கள் உலக கோப்பை டி20 தொடர் நடைபெற உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தொடர் நடப்பது உறுதியாகாவிட்டாலும், இந்திய அணி அதற்கு தயாராகும்போது சரியான திட்டமிடல் அவசியம் என்கிறார் இர்பான் பதான். இது குறித்து ஒரு டிவி நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:

ஐசிசி டிராபி தொடர்களுக்கு தயாராவதில் எப்போதுமே சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். எத்தனை திறமை வாய்ந்த அணியாக இருந்தாலும், சரியான திட்டமிடுதல் இல்லாவிட்டால் வெற்றியை வசப்படுத்துவது கடினம். அதில் மட்டும் தேவையான மாற்றங்களை செய்துவிட்டால் அனைத்து வகையிலும் சிறப்பான நமது அணி உலக சாம்பியனாவதை யாராலும் தடுக்க முடியாது. கடந்த ஆண்டு உலக கோப்பை அரை இறுதியில் நியூசிலாந்திடம் தோற்றதற்கு , நமது பேட்டிங் வரிசையில் 4வது வீரராக யாரைக் களமிறக்குவது என்ற குழப்பமே முக்கிய காரணம். 11 வீரர்கள் அடங்கிய அணியை இறுதி செய்வதில் கடைசி வரை தடுமாற்றம் இருந்தது. சரியான திட்டமிடுதல் இருந்திருந்தால் நமது அணி நிச்சயம் கோப்பையை வென்றிருக்கும். இவ்வாறு பதான் கூறியுள்ளார்.

Tags : tournaments ,ICC , Proper planning, essential , preparing, ICC tournaments ...
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...