கொரோனாவை கட்டுப்படுத்த முடியல சாமி... ‘மது’ படைத்து பூஜை செய்த கலெக்டர், எஸ்பி

உஜ்ஜைனி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனா பரவல் கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக இருப்பதால், தொடர்ந்து சிவப்பு மண்டலத்தில் உள்ள பகுதியாகவே நீடிக்கிறது. கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைமை ஏற்பட்டதால், உஜ்ஜைனி மாவட்ட நிர்வாகம் இப்போது கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறது. இந்நிலையில், நேற்று உஜ்ஜைனி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங், ேபாலீஸ் எஸ்பி மனோஜ் சிங் ஆகியோர் உஜ்ஜைனி அடுத்த குத்ரியில் உள்ள பிரபலமான 24 தூண் மாதா கோவிலுக்கு சென்றனர். அங்கு அவர்கள் நீண்ட நேரம் பூஜைகள் செய்த பிறகு, சுவாமிக்கு மது படைத்து வழிபாடு செய்தனர்.

அதனை தொடர்ந்து மாதா சுவாமி சிலைக்கு மதுவை அங்கிருந்த சிலர் வாயில் ஊற்றினர். இந்த வீடியோ இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கோவிலில் நவராத்திரியின் எட்டாம் நாளில் மதுபானங்களை வைத்து சுவாமிக்கு படைத்து வழிபாடு செய்வது வழக்கம். இந்தாண்டு கொரோனா ஊரடங்கால் பாரம்பரிய விழா நடத்தப்படவில்லை. தற்போது உஜ்ஜைனி நகரத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க கலெக்டரும், எஸ்பியும் உள்ளூர் நிர்வாகிகளுடன் சேர்ந்து சுவாமிக்கு மதுவை வைத்து வழிபாடு செய்தனர்.

Related Stories: