×

வேலூரில் மீண்டும் கொரோன தொற்று அதிகரிப்பு.: கொரோனா பரவலை தடுக்க சந்தைகள் ஒரு நாள் மூடல்

வேலூர்: வேலூரில் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் இன்று ஒரு நாள் சந்தைகள் மற்றும் அனைத்து விதமான கடைகளும் மூடப்பட்டது. ஜூன் 1-ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்ட பின்னர் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரங்களில் மட்டும் 138 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில் மண்டி தெருவில் வியாபாரி ஒருவரின் குடும்பத்துக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை நேதாஜி மார்க்கெட், காய்கறி கடைகள் மற்றும் மண்டி தெரு உள்ளிட்ட அனைத்து கடைகளையும் மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது. மூடப்பட்டுள்ள இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் இருக்கும்போதே திடீரென காந்தி வீதியில் உள்ள சண்டே மார்க்கெட் திறக்கப்பட்டது. தகவல் அறிந்து சென்ற பெரியக்கடை போலீசார் வியாபாரிகளை கடைகளை அகற்றுமாறு கூறினார். ஆனால் வியாபாரிகள் மறுத்து விட்டதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை எடுத்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.


Tags : Vellore ,Markets ,Closure , , Coronal ,Vellore, Markets,Prevent, Coronal ,Dissemination
× RELATED இளம்பெண் ஆபாச வீடியோவை நண்பர்களுக்கு...