×

11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு தடை; புதிய பாடத்தொகுப்புக்கு உரிய அனுமதியைப் பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை: முதன்மை கல்வி அலுவலர்களிடம் அனுமதி பெறாமல் 11-ம் வகுப்பில் புதிய பாடத்தொகுப்பிற்கு மாணவர் சேர்க்கையை நடத்த கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 11-ம் வகுப்பு மாணவர் சேக்கைக்கு தடை விதித்திருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. இந்த உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 10-ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அரசு தற்போது இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது 10ம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பெரும்பாலான பள்ளிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. மாணவர் பெற்றோரிடம் இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு பல்வேறு புகார் வந்துள்ளது. 10-ம் வகுப்புக்கு இன்னும் ரிசல்ட் வெளியிடப்படாத நிலையில் மாணவர் சேர்க்கை நடத்தக்கூடாது என்று தற்போது பள்ளிக்கல்வித்துறை ஒரு தடை உத்தரவை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

11-ம் வகுப்பில் ஏற்கனவே அமலில் இருந்து வரக்கூடிய 600 மதிப்பெண் பாடத்தொகுப்புக்கு பதிலாக இந்த ஆண்டு முதல் 500 மதிப்பெண்கள் கொண்ட புதிய பாடத்தொகுப்பானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாடத்தொகுப்பின் கீழ் மாணவர் சேர்க்கையை முன் அனுமதி பெறாமல் நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவ்வாறு அனுமதி பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.


Tags : Prohibition ,Prohibition Student , 11th grade student admission, ban, school
× RELATED கள்ளச்சாராயம் விற்றவர் கைது