×

பிரதமர் மோடிக்கு எதிராக மூத்த பத்திரிகையாளர் அவதூறாக பேசிய வழக்கு: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறாக பேசியதாக பத்திரிகையாளர் வினோத் துவா மீது பாஜகவை சார்ந்த அஜய் ஷ்யாம், சிம்லா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பயங்கரவாத தாக்குதல்களையும், மரணங்களையும் வாக்கு வங்கி அரசியலுக்கு பிரதமர் பயன்படுத்தி ஆதாயம் அடைவதாக வினோத் துவா பேசியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் இமாச்சல பிரதேச அரசு 2 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டதுடன் வினோத் துவாவை கைது செய்ய இடைக்கால தடை விதித்தனர். இருப்பினும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதிக்குமாறு வினோத் துவா விடுத்த கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் விசாரணையை தொடர்ந்து நடத்த காவல்துறைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

Tags : Modi: Supreme Court , Prime Minister Modi, senior journalist, slander, case, ban, Supreme Court denial
× RELATED சபாநாயகர் என்பவர் நடுவராக செயல்பட...