×

கொரோனா வைரஸ் காரணமாக சென்னையில் மேலும் ஒரு செவிலியர் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மக்கள் அச்சம்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்த கொரோனா பாதிப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என என எவரும் தப்பவில்லை. இந்த சூழ்நிலையில் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொருக்குப்பேட்டையை சேர்ந்த 52 வயது செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் ஏற்கனவே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று; சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் பணிக்கு சேர்ந்துள்ளார்.

பணியில் சேர்ந்து 2 நாட்கள் ஆன நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையை பொறுத்தவரையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என 75 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் சென்னையில் அதிகப்படியான உயிரிழப்பு ஏற்படுவது சென்னை மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.


Tags : nurse deaths ,Chennai ,nurse , Coronavirus, Madras, Nurses, Fatalities
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...