×

மும்பை புல்தானாவில் உள்ள லோனார் ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் மாறியது ஏன்? - விஞ்ஞானிகள் ஆய்வு

மும்பை: மும்பையில் இருந்து சுமார் 500 கி.மீ. தூரத்தில் புல்தானா மாவட்டத்தில் புகழ்பெற்ற லோனார் ஏரி உள்ளது. இந்த ஏரி 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் பூமியை தாக்கியதால் ஏற்பட்ட பள்ளத்தால் உருவான ஏரி என கூறப்பட்டு வருகிறது. 1.2 கி.மீ. விட்டத்தில் முட்டை வடிவில் அமைந்து உள்ள இந்த ஏரி 150 மீட்டர் ஆழம் உடையது. லோனார் ஏரியை 1823-ம் ஆண்டு சி.ஜே.இ. அலெக்சாண்டர் என்ற ஆங்கிலேய அதிகாரி கண்டுபிடித்துள்ளார்.

இந்நிலையில் பச்சை நிறத்தில் காணப்படும் ஏரி சமீபத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிறத்தில் மாற்றம் அடைந்துள்ளது. இது அடிக்கடி நிகழ்ந்தாலும் இந்த முறை நீர் அதிக அளவில் ஒளிர்வதால் உள்ளூர்வாசிகளும், ஆய்வாளர்களும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த விவாதங்கள் தொடங்கியுள்ளன. நீரின் உப்புத்தன்மை அல்லது நீரில் உள்ள பாசிகளால் இந்த நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம் என ஒரு பிரிவினர் கூறியுள்ளனர்.

இது அப்பகுதி மக்களை பெரும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி உள்ளது. இதனால் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய லோனார் ஏரியில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்ய உள்ளது. இது குறித்து புல்தானா மாவட்ட கலெக்டர் சுமன் சந்திரா கூறுகையில், லோனார் ஏரி சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அது வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வருகிறது. வனத்துறையினர் ஏரி தண்ணீரை தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அந்த நிறுவனத்தை சோ்ந்த ஆராய்ச்சியாளர்களும் நாளை வந்து தண்ணீர் மாதிரியை எடுத்து சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

Tags : Mumbai ,Lonar Lake , Mumbai, Pultana, Lonar Lake, pink color, why?
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...