×

தெற்கு ரயில்வே கார்டு பணியிடங்களுக்கான தேர்வில் முறைகேடு?.:ரயில்வே துறையில் தமிழர்களுக்கு அநீதி விளைவிப்பதாக குற்றச்சாட்டு

சென்னை: தெற்கு ரயில்வேயில் 96 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்வாகி இருப்பது மோசடியான செயல் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தெற்கு ரயில்வேயில் சரக்கு வண்டி பாதுகாவலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். இதில் தமிழர்கள் மட்டும் 3000 பேர் வரை கலந்துகொண்டுள்ளனர்.  

இந்த நிலையில் ஆன்லைன் தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  மீதமுள்ள 91 இடங்களுக்கு வடமாநிலத்தவர் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு முடிவுகள் தெற்கு ரயில்வேயின் தமிழர் விரோதப்போக்கை காட்டுவதாக மதுரை எம்.பி.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

தெற்கு ரயில்வே நடத்திய தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனம் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே தேர்வுகள் பல ஆண்டுகளாகாவே வட இந்தியர்களுக்கு சாதகமாக நடத்தப்படுகிறது என்பது அவரது குற்றச்சாட்டு. ஆன்லைன் தேர்வு குறித்து எழுந்துள்ள குற்றச் சாட்டை விசாரணைக்கு கொண்டுவர வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.


Tags : Southern Railway ,Card Workers ,workplace , Southern Railway,card ,workplace, Tamils ,
× RELATED நாளை முதல் வந்தே பாரத் சிறப்பு ரயில்