×

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக திகழும் தாராவி குடிசை பகுதி : பாதிப்பு சராசரி 60%ல் இருந்து 20% ஆக சரிந்து சாதனை!!

மும்பை : ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது. கொரோனா பரவல் அதிகமிருந்ததால் முதலில் சிவப்பு மண்டலமாக இருந்த தாராவியில் அத்தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்தியாவின் வுகானாக மாறிய மும்பை தாராவி குடிசைப் பகுதியில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில், 7 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்து சாதனை புரிந்துள்ளனர். 47,500 வீடுகளில் வசிப்போருக்கு உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் லேசான அறிகுறி உள்ளவர்கள், முழுமையாக நோய் பாதிப்பு உள்ளவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்காக அருகில் உள்ள பள்ளிகள், விளையாட்டு கழக கட்டிடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.  

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்படுவதோடு, தேவைப்படுவோருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த காரணத்தால், தாராவியில் கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்த பாதிப்பு எண்ணிக்கை 3ல் 1 பங்காக குறைந்துள்ளது. தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளொன்றுக்கு சராசரியாக 60ல் இருந்து 20 ஆக குறைந்துள்ளது. குணமானோரின் சதவீதம் 51 சதவீதமாக அதிகரித்த நிலையில், உயிரிழப்பு கணிசமாகவும் குறைந்துவிட்டது.


Tags : Tarawi Cottage ,cottage ,Dharavi , Corona, paradigm, horror, dharavi, slum, vulnerability, collapse, record
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...