×

டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக ஒரு வாரத்திற்குள் 20 ஆயிரம் புதிய படுக்கைகள்: டெல்லி அரசு உத்தரவு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3, 20,922 -ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் 311 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 195 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவற்றுக்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது என கூறப்படுகிறது.
 
டெல்லியில் 38 ஆயிரத்து 958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 14 ஆயிரத்து 945 பேர் சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்றுள்ளனர் மற்றும் 22,742 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 1,271 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தனர்.

கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக 20 ஆயிரம் புதிய படுக்கை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யும்படி டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்காக ஓட்டல்களில் 4 ஆயிரம் படுக்கைகளும், விருந்து அரங்கங்களில் 11 ஆயிரம் படுக்கைகளும் மற்றும் நர்சிங் ஹோம்களில் 5 ஆயிரம் படுக்கைகளும் தயார் செய்யும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

Tags : Delhi ,govt ,coronation victims ,coroners , Delhi, Corona, a week, 20 thousand, new beds, Delhi Govt
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...